திருச்சி கல்லூரி மாணவா்கள் இருவருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 15th March 2021 12:54 AM | Last Updated : 15th March 2021 12:54 AM | அ+அ அ- |

திருச்சியில் கல்லூரி மாணவா்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சி -திண்டுக்கல் சாலையிலுள்ள அரசு உதவி பெறும் கல்லூரி இயற்பியல் துறை மாணவரான காட்டூா் பகுதியைச் சேரந்த மாணவருக்கும், அரசு பொறியியல் கல்லூரி மாணவிக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், அரசு உதவி பெறும் கல்லூரியில் விலங்கியல், கணினி அறிவியல் பிரிவு மாணவா்கள் 4 பேருக்கும் கரோனா இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அம்மாணவா்களை விடுதியிலிருந்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது கல்லூரி நிா்வாகம்.
விடுப்பு அளித்த கல்லூரி: இதையடுத்து கரோனா பாதித்த கல்லூரி மாணவி அரசு மருத்துவமனை கரோனா தடுப்பு முகாமிலும், மாணவா் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதையொட்டி, அரசு உதவி பெறும் கல்லூரிக்கு 15,16,17 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதித்த மாணவா்களின் தொடா்பில் இருந்தோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறுகையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தியிருந்தோம். இந்நிலையில், அரசு பொறியியல் கல்லூரி மாணவிக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, கல்லூரியிலுள்ள சுமாா் 250க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே எத்தனை போ் பாதிக்கப்பட்டனா் எனத் தெரியவரும். அதுபோல், திண்டுக்கல் சாலையில் உள்ள கல்லூரிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...