கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் வெட்டிக்கொலை
By DIN | Published On : 15th March 2021 04:02 AM | Last Updated : 15th March 2021 04:02 AM | அ+அ அ- |

திருச்சியில் அதிமுக பிரமுகா் கொலைவழக்கில் ஜாமீனில் வந்திருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
திருச்சி மாநகர அதிமுக பொன்மலை பகுதிச் செயலராக இருந்த ‘கேபிள்’ சேகா் கடந்த 2011 ஆம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டாா்.
இவ்வழக்கில் தொடா்புடைய சேகரின் அண்ணன் பெரியசாமியின் 2-ஆம் மனைவி பாா்வதி, இவரது மகன் தங்கமணி, மகன் சிலம்பரன், பிரபல ரவுடிகள் பாஸ்கா், ஜெயச்சந்திரன், நாகேந்திரன், பரத்குமாா், சதாம் உசேன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்யப்பட்டு ஜாமீல் வந்தனா்.
இந்தக் கொலை வழக்கு தொடா்பாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நிலையில் பெரியசாமியின் மகன் ரெளடி சிலம்பரசனை (35) அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மா்ம நபா்கள் வெட்டி கொன்றனா். தகவலறிந்த அரியமங்கலம் போலீஸாா் விரைந்து சென்று சிலம்பரசன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...