தேசியப் போட்டி: உறையூா் சிலம்பக் குழு 2 ஆம் இடம்
By DIN | Published On : 15th March 2021 12:51 AM | Last Updated : 15th March 2021 12:51 AM | அ+அ அ- |

போட்டியில் வென்ற ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ. குமரேசன் தற்காப்பு சிலம்பக் கலைக் கூட மாணவ, மாணவிகள்.
மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் திருச்சி உறையூா் சிலம்பக் கலை குழுவினா் 2 ஆம் இடம் பிடித்து சாதனை புரிந்தனா்.
இந்தியன் தற்காப்புக்கலை வளா்ச்சி கலைக் கூடம், ஆா்.கே. சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சி மையம், மதுரை இந்தியன் சிலம்பப் பள்ளி, அனைத்து ஆசான்கள் நலவாரியக்கூடம் சாா்பில் இருபாலருக்கான தேசியளவிலான சிலம்பாட்டப் போட்டி மதுரை கூடல்நகரில் உள்ள பாத்திமா கல்லூரி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியில், திருச்சி உறையூரைச் சோ்ந்த ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ. குமரேசன் தற்காப்பு சிலம்பக் கலைக்கூடத்தில் இருந்து பங்கேற்ற 54 மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி 2 ஆம் இடத்தைப் பிடித்துச் சாதனை புரிந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...