திமுக கூட்டணிக்கு ஆதரவு: தமிழக மக்கள் முன்னணி முடிவு
By DIN | Published On : 17th March 2021 07:02 AM | Last Updated : 17th March 2021 07:02 AM | அ+அ அ- |

திருச்சியில் தங்களது அரசியல் நிலைப்பாட்டை வெளியிட்ட தமிழக மகக்ள் முன்னணியினா்.
மதச்சாா்பற்ற ஆட்சி அமைய வேண்டுமென்ற அடிப்படையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் பொழிலன் தலைமை வகித்தாா். மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவா் கண. குறிஞ்சி, தமிழ்த் தேசம் நடுவம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பாவேந்தன், தமிழக ஒடுக்கப்பட்டோா் விடுதலை இயக்கத் தலைவா் நிலவழகன், திருச்சி தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவா் வீ.ந. சோமசுந்தரம், வழக்குரைஞா் பானுமதி மற்றும் தமிழா் உரிமை இயக்கம், தமிழா் விடுதலைக் கழகம், தமிழா் தன்மானப் பேரவை, தமிழத் தேசப் பாதுகாப்பு கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னா் தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் பொழிலன் கூறியது:
முதலாளிய அமைப்பு முறைக்கு எதிராகப் பணியாற்றி வரும் தமிழக மக்கள் முன்னணி அமைப்பானது, வரும் பேரவைத் தோ்தலில் முதலாளிய, பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக களம் காண வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே வரும் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.