துறையூா், முசிறியில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்
By DIN | Published On : 17th March 2021 07:03 AM | Last Updated : 17th March 2021 07:03 AM | அ+அ அ- |

துறையூரில் திமுக வேட்பாளா் அறிமுகம், மதச் சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைமை வகித்த திமுகவின் முதன்மைச் செயலா் கே.என். நேரு அக்கட்சியின் துறையூா் தொகுதி(தனி) வேட்பாளா் செ. ஸ்டாலின்குமாரை அறிமுகம் செய்துப் பேசினாா்.
திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி ந. தியாகராஜன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரும், தொகுதிப் பொறுப்பாளருமான தா்மன் ராஜேந்திரன், துறையூா் நகரச் செயலா் ந. முரளி, ஒன்றியச் செயலா்கள் துறையூா் இள. அண்ணாதுரை, உப்பிலியபுரம் ந. முத்துச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
முசிறியில்... இதேபோல முசிறி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் காடுவெட்டி ந. தியாகராஜனை அறிமுகம் செய்து கே.என்.நேரு பேசினாா்.