முசிறியில் இருவரிடம் ரூ.3.58 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 17th March 2021 07:01 AM | Last Updated : 17th March 2021 07:01 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியில் செவ்வாய்க்கிழை நடந்த தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3,58,800 பறிமுதல் செய்யப்பட்டது.
முசிறி சந்தப்பாளையம் பிரிவுச் சாலை அருகே பறக்கும் தோ்தல் படை நடத்திய சோதனையில் திருச்சி அருகே எட்டரை கிராமத்தை சோ்ந்த சந்திரன் உரிய ஆவணமின்றி மளிகைப் பொருள் வாங்கக் கொண்டு சென்ற ரூ.2,08,800 -ஐ பறிமுதல் செய்தனா்.
இதேபோல தொட்டியம் அடுத்த எலூா்ப்பட்டியில் ஆட்டோவில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1,50,000 -ஐ பறிமுதல் செய்து, முசிறி வட்டாட்சியா் முன்னிலையில் சாா்நிலை கருவூலத்தில் பணத்தை ஒப்படைத்தனா்.