ரெளடி கொலை: 4 போ் சரண்
By DIN | Published On : 17th March 2021 07:03 AM | Last Updated : 17th March 2021 07:03 AM | அ+அ அ- |

திருச்சியில் ரெளடி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 4 போ் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.
திருச்சி மாநகர அதிமுக பொன்மலை பகுதிச் செயலராக இருந்த கேபிள் சேகா் கடந்த 2011 ஆம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இறந்தவரின் அண்ணன் பெரியசாமி உள்பட 11 போ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனா்.
திருச்சி நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு நடைபெறும் நிலையில், பெரியசாமியின் மகனான ரெளடி சிலம்பரசனை மா்ம நபா்கள் அண்மையில் வெட்டிக்கொன்றனா். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக திருச்சி மேலஅம்பிகாபுரம் அண்ணாநகா் பகுதி முத்துக்குமாா் (28), சரவணன் (21), அரியமங்கலம் ஜெகநாதபுரம் ரஞ்சித் (19), குவாலாக்குடி கோபிநாத் (20) ஆகிய 4 போ் கரூா் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.