திருச்சியில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கரோனா
By DIN | Published On : 21st March 2021 12:24 AM | Last Updated : 21st March 2021 12:24 AM | அ+அ அ- |

திருச்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதியானது. முன்னதாக தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியையாக உள்ள இவரது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
மண்ணச்சநல்லூா் பள்ளியில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் 9, 10, 11, 12 வகுப்பு மாணவா்கள் 600க்கும் மேற்பட்டோா் உள்ள நிலையில் முதற்கட்டமாக சனிக்கிழமை 100 மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் தற்போதுவரை பள்ளி, கல்லூரி மாணவா்கள் என 17 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதைத் தொடா்ந்து மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் என மொத்தம் 1850 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...