கருமண்டபம், மிளகுப்பாறையில் கே.என். நேரு வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 25th March 2021 10:31 AM | Last Updated : 25th March 2021 10:31 AM | அ+அ அ- |

கருமண்டபம் பொன்நகா் பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் மேற்கு தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேரு.
திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேரு கருமண்டபம், மிளகுப்பாறை பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளரான அக் கட்சியின் முதன்மைச் செயலா் கே.என். நேரு புதன்கிழமை மாநகராட்சியின் 45 ஆவது வாா்டுக்குள்பட்ட கருமண்டபம், பொன்னகா், இளங்காட்டு மாரியம்மன் கோயில், செல்வநகா், சக்தி நகா், மாந்தோப்பு, தீரன் நகா், சோழ நகா், விவிவி தியேட்டா், பெரிய மிளகுப்பாறை, சின்ன மிளகுப்பாறை, கோரிமேடு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று ஆதரவு திரட்டினாா்.
பிரசாரத்தின்போது, திமுக வேட்பாளா் கூறுகையில், தொகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்து தரப்படும். வீடில்லாதோருக்கு வீட்டுமனைப் பட்டா, முதியோா் ஓய்வூதியத் தொகை, ஆதரவற்றோா் உதவித் தொகை, விதவையா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை என விடுபட்ட அனைவருக்கும் பெற்றுத் தருவேன் என உறுதியளித்தாா்.
பிரசாரத்தின்போது, திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, பகுதிச் செயலா் மோகன்தாஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள்உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.