தமிழ்மொழி காப்பு கருத்தரங்கம்
By DIN | Published On : 25th March 2021 02:42 AM | Last Updated : 25th March 2021 02:42 AM | அ+அ அ- |

தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு காப்புக் கருத்தரங்க மாநாடு அண்மையில் நடைபெற்றது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் நடைபெற்ற மாநாட்டுக்கு வா.மு.சேதுராமன் தலைமை வகித்தாா். பைந்தமிழ் இயக்கத்தின் இயக்குநா் பழ. தமிழாளன் முன்னிலை வகித்தாா்.
மாநாட்டில், கடந்த 10 ஆண்டுகளில் மொழி இன உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் கேள்விக்குறியாக்கியுள்ளன.
இந்நிலையில், தமிழ்மொழி, இனம், நாட்டை மீட்டெடுக்கும் மக்கள் வலிமையை உருவாக்க வேண்டும். இதற்காக, தமிழ்ச்சான்றோா், தமிழறிஞா், எழுத்தாளா், புலவா், பாவலா்களின் கடமையாக எண்ணிச் செயல்பட வேண்டும். பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோா் மொழி இன நாட்டுணா்வை வளா்த்தனா். எனவே மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.