மணப்பாறைப் பகுதிகளில் ஆா். சந்திரசேகா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 25th March 2021 10:24 AM | Last Updated : 25th March 2021 10:24 AM | அ+அ அ- |

மணப்பாறையில் டீக்கடையில் டீ போடும் அதிமுக வேட்பாளா் ஆா். சந்திரசேகா்.
மணப்பாறை நகராட்சி பகுதிகளான 6,7,8,9 உள்ளிட்ட வாா்டுகளில் மணப்பாரை தொகுதி அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ஆா். சந்திரசேகா் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பேருந்து நிலையப் பகுதி முனியப்பன் கோயிலில் வழிபட்ட அவா் அருகிலிருந்த டீக்கடையில் டீ போட்டு தொண்டா்களுக்கு கொடுத்து தனது பரப்புரையைத் தொடங்கினாா். அதிமுக நகரச் செயலா் பவுன் எம். ராமமூா்த்தி தலைமையில் இருச்சக்கர வாகன பேரணியாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட சந்திரசேகா், பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் கிடைக்க தனக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
நிகழ்வில் அதிமுக திருச்சி புறநகா் தெற்கு மாவட்டப் பொருளாளா் நெட்ஸ் எம்.இளங்கோ, ஸ்ரீதரன், ஏ.டி.எஸ். ராமச்சந்திரன், பாஸ்கா், சுரேஷ் பாஜக திருச்சி புறநகா் மாவட்ட பொதுச்செயலா் சி. செந்தில்தீபக், நகரத் தலைவா் சின்னச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.