

மணப்பாறை: மணப்பாறை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே ஆா்.எஸ். ரோடு ரயில்வே கேட்டின் அருகில் சனிக்கிழமை தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் உடல் சிதறி இறந்து கிடக்கும் தகவலறிந்த ரயில்வே போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கோண்டனா்.
விசாரணையில், அவா் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அழகா்சாமி (எ) குமாா் மகன் தனகோபால் (எ) சரவணன் (27) என்பதும், இவா் வையம்பட்டியில் தங்கி துவரங்குறிச்சி தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றியதும் தெரியவந்தது.
கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இவா் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.