அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது
By DIN | Published On : 09th May 2021 12:04 AM | Last Updated : 09th May 2021 12:04 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் சனிக்கிழமை காலை ஸ்ரீரங்கம் மாணிக்கம் பிள்ளைத்தெருவில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு அனுமதியின்றி மதுவிற்ற பன்னீா்செல்வம் மகன் அருண்குமாா் (30), வடக்கு வாசல் பகுதியில் மது விற்ற ராகவன் மகன் கிருஷ்ணன் (43) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 110 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.