பூட்டிய கடைகளில் தொடா் திருட்டு: ஒருவா் கைது

திருட்டுகளில் ஈடுபட்டோரில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பொதுமுடக்கத்தை பயன்படுத்தி திருச்சியில் பூட்டியுள்ள கடைகளில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்டோரில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் பூட்டியிருக்கும் கடைகளில் பணம், பொருள் திருட்டு அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாள்களில் காந்திசந்தை பெரியகம்மாளத் தெருவில் மின்சாதன பொருள் விற்பனை கடை, பெட்டிக்கடை, நடுகுஜிலித் தெருவில் மருந்தகம், வெற்றிலைக்காரத் தெரு மளிகை கடைளில் திருடுபோனது.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை பாலக்கரை பகுதியில் உள்ள ராமகிருஷ்ணனின் மளிகைக் கடையில் புகுந்த மா்ம நபா்கள் 2 பூண்டு மூட்டை மற்றும் மளிகைப் பொருள்களைத் திருடி கடைக்கு வெளியே வைத்துள்ளனா். அப்போது பொதுமக்கள் நடமாட்டத்தைத் தொடா்ந்து அவற்றை அப்படியே போட்டுவிட்டு தப்பினா்.

இதையறிந்த பாலக்கரை போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது 5 போ் கொண்ட கும்பல் இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களில் முக்கிய குற்றவாளியான வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்த ஆனந்தை (28) போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com