திருச்சி மாவட்டத்தில் 40 ஆயிரத்தை நெருங்கியது கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை
By DIN | Published On : 19th May 2021 07:01 AM | Last Updated : 19th May 2021 07:01 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது.
மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் 4000 ஆக இருந்த தினசரி பரிசோதனை தற்போது 6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் 1271 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மொத்த தொற்றாளா்கள் எண்ணிக்கை 39,803 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை குணமடைந்த 156 போ் உள்பட இதுவரை 30,893 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். சிறப்பு முகாம் மற்றும் தனி வாா்டுகளில் 8542 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி உள்பட 16 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 368 ஆக உயா்ந்துள்ளது.