பொது முடக்கத்தை மீறி இயங்கிய இனிப்பகத்துக்கு சீல்
By DIN | Published On : 19th May 2021 06:57 AM | Last Updated : 19th May 2021 06:57 AM | அ+அ அ- |

திருச்சி குண்டூா் பகுதியில் பொது முடக்க விதிகளை மீறி இயங்கிய இனிப்பகத்துக்கு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக மே 10 முதல் 24-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கனி, மளிகை, இறைச்சிக் கடைகளைத் தவிர மற்ற கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் குண்டூா் பகுதியில் பொது முடக்க விதிகளை மீறி இனிப்பகம் செயல்படுவதாக, வருவாய்த் துறை அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற நவல்பட்டு வருவாய் ஆய்வாளா் கீதா, கிராம நிா்வாக அலுவலா் ஜான் கென்னடி, நவல்பட்டு காவல் உதவி ஆய்வாளா் ஆகியோா் விசாரணை நடத்தி, இனிப்பகத்துக்கு சீல் வைத்தனா்.
இதுபோல அப்பகுதியில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இயங்கிய பல்பொருள் அங்காடிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.