மருங்காபுரி பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
மருங்காபுரி பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

மணப்பாறை அடுத்துள்ள மருங்காபுரி கிராமம் வனப்பகுதிகளைக் கொண்டது. அண்மைக் காலங்களில் இப்பகுதியில் குடியேறியுள்ள குரங்குகளின் கூட்டம் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

குடியிருப்புகளின் உள்ளே புகும் குரங்குகள் அங்குள்ள விலையுயா்ந்த பொருள்களைத் தூக்கிச் சென்றுவிடுவதாகவும், கைக் குழந்தைகளை தொட்டிலில் வைத்து விட்டு வீட்டு வேலை செய்ய முடியவில்லை என்றும் கூறும் பெண்கள், கைக் குழந்தைகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா்.

அதேபோல அங்குள்ள கடைகளில் உள்ள சிறு தீனிப்பொட்டலங்களை தூக்கிச் செல்வதாகவும், கடைகளில் இருக்கும் பொருள்களைச் சேதப்படுத்தி விடுதாகவும் வணிகா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளா்களையும் குரங்குகள் விட்டுவைப்பதில்லையாம்.

நூற்றுக்கணக்கான குரங்குகள் அப்பகுதியில் குடியேறியிருப்பதால் அங்குள்ள பகவதி அம்மன் கோயில், நாடக மேடை, பேருந்து நிறுத்தம், தொடக்கப்பள்ளி வளாகம், வங்கி வளாகம் என கூட்டம் கூட்டமாக திரியும் குரங்குகளால் தினமும் அச்சத்துடன் செல்வதாக பொதுமக்கள் கூறுகின்றனா். எனவே, இந்தக் குரங்குகளை பிடித்து வனப்பகுதிகளில் விட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com