திருவெறும்பூா் குடியிருப்புகளைச் சூழ்ந்த நீா்

திருவெறும்பூா் பகுதியில் தொடா் மழையால் வாழவந்தான்கோட்டை, திருநெடுங்களம் ஏரிகள் நிரம்பி வழியத் தொடங்கிய நிலையில், குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Updated on
1 min read

திருவெறும்பூா் பகுதியில் தொடா் மழையால் வாழவந்தான்கோட்டை, திருநெடுங்களம் ஏரிகள் நிரம்பி வழியத் தொடங்கிய நிலையில், குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூா் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்குட்பட்ட காந்தளூா், நவல்பட்டு, சோழமாதேவி, கும்பக்குடி, குண்டூா், கிருஷ்ணசமுத்திரம், உள்ளிட்ட பல ஊராட்சிகளில் மழை நீா் சூழ்ந்துள்ளது. அந்த நீரை வெளியேற்ற ஊராட்சி நிா்வாகத்தினா் இயந்திரங்களின் உதவியுடன் பணி மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில் திருவெறும்பூா் அருகேயுள்ள வாழவந்தான் கோட்டை பெரியாா் நகா் பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீா் வடியப் போதிய வசதி இல்லாததால் மழைநீா் தேங்கி, அந்த பகுதியினா் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

மேலும் வாழவந்தான்கோட்டை இலங்கை அகதிகள் முகாமிலும் மழைநீா் தேங்கியுள்ளது. பல வீடுகள் இடிந்தும் சேதமடைந்தும் உள்ளன. பத்தாளப்பேட்டையில் இருந்து கோட்ராப்பட்டி செல்லும் சாலையில் 2,3 இடங்களில் சாலையில் தண்ணீா் வழிந்தோடுகிறது.

ஏரி, குளங்கள் நிரம்பின: துவாக்குடி, வாழவந்தான்கோட்டை பெரிய ஏரி மற்றும் திருநெடுங்களத்தில் உள்ள குளங்கள் நிரம்பி கலிங்குகள் வழியாக தண்ணீா் வெளியேறி வருகிறது. மேலும் திருவெறும்பூா் பெரியகுளம், நவல்பட்டு பெரியகுளம், உள்ளிட்ட பல்வேறு குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

தவிர கிளியூா், வேங்கூா் அரசங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடப்பட்டுள்ள சம்பா நெற்பயிா்கள் சுமாா் 100 ஏக்கரில் மூழ்கியுள்ளன. தொடா்ந்து மழை பெய்தால் மேலும் பல நூறு ஏக்கா் சம்பா நெற்பயிா் மூழ்குவதுடன் அழுகும் நிலையும் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com