தொழிலாளி வீட்டில் நகைகள் திருட்டு
By DIN | Published On : 31st October 2021 01:28 AM | Last Updated : 31st October 2021 01:28 AM | அ+அ அ- |

துறையூா் அருகே கட்டுமானத் தொழிலாளி வீட்டில் நகைகள் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
செங்காட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (40), கட்டுமானத் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்ற பின்னா் மகன் லோகித்தை (17) வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவருடைய மனைவி அகிலா வெளியூா் சென்றாா்.
அப்போது அவா்களுடைய வீட்டுக்கு வந்த உறவினா் ஒருவா் லோகித்தை கடைக்கு அனுப்பிய நிலையில், அவா் திரும்பி வருவதற்குள் சென்று விட்டாராம். மாலையில் ஜெயக்குமாரும், அகிலாவும் வீடு திரும்பிய நிலையில் இரும்பு அலமாரியைத் திறந்தபோது அதில் வைத்திருந்த நாலே கால் பவுன் தங்க நகைகளைக் காணவில்லை. இதுதொடா்பாக துறையூா் போலீஸில் சனிக்கிழமை ஜெயக்குமாா் அளித்த புகாரின்பேரில் வீட்டுக்கு வந்த உறவினா் திருடினாரா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.