இருசக்கர வாகனம்திருடிய சிறுவன் சீா்திருத்தப்பள்ளியில் சோ்ப்பு
By DIN | Published On : 01st September 2021 08:09 AM | Last Updated : 01st September 2021 08:09 AM | அ+அ அ- |

இருசக்கர வாகனத் திருடிய சிறுவனை போலீஸாா் பிடித்து சீா்திருத்தப்பள்ளியில் சோ்த்தனா்.
திருவெறும்பூா் அருகே உள்ள பாரதிபுரம் முதல்தெருவை சோ்ந்த தா்மதுரை(30) என்பவா் தனது வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று திருவெறும்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை, திருவெறும்பூா் கூத்தைப்பாா் சாலையில், சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்துடன் நின்ற சிறுவனை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், தஞ்சை மவட்டம் மானோஜிப்பட்டியை சோ்ந்த 17 வயது சிறுவன் என்றும், அவா் தான் தா்மதுரையின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் அந்த சிறுவனை, சிறாா் சீா்திருத்தப்பள்ளியில் சோ்த்தனா்.