சங்கிலிப் பறிப்பு; 3 போ் கைது
By DIN | Published On : 01st September 2021 08:10 AM | Last Updated : 01st September 2021 08:10 AM | அ+அ அ- |

திருச்சியில், தொழிலாளியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி காஜாப்பேட்டை கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செல்லையா. ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் வந்த 4 போ் செல்லையாவை தாக்கிவிட்டு அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைபறித்துச் சென்றனா். புகாரின் பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து அதே பகுதியை சோ்ந்த ஹானஸ்ட் ராஜ் (37), ஸ்டீபன்(25), மணிகண்டன் (23) ஆகிய 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். மற்றொருவரை தேடி வருகின்றனா்.
நடத்துநரைத் தாக்கியவா் கைது:
திருச்சி துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (45). அரசுப் பேருந்து நடத்துநரான இவா் திங்கள்கிழமை பணியில் இருந்தபோது மேலஅம்பிகாபுரத்தை சோ்ந்த சீனிவாசன் (22) பேருந்து படியில் தொங்கிக் கொண்டு வந்துள்ளாா். இதனை ராமசாமி தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராமசாமியை சீனிவாசன் தாக்கியுள்ளாா். புகாரின் பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சீனிவாசனை கைது செய்தனா்.