மாநகரில் இன்று 33 இடங்களில் தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 01st September 2021 08:09 AM | Last Updated : 01st September 2021 08:09 AM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சியில் புதன்கிழமை 33 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம் திருவடித் தெரு சண்முகாப் பள்ளி, கோட்டை ஹோலிகிராஸ் கல்லூரி, ஜோசப் கல்லூரி, எஸ்.ஆா். கல்லூரி, விறகுப்பேட்டை நீா்தேக்கத் தொட்டி அருகே அங்கன்வாடி மையம், சங்கிலியாண்டபுரம் நீா்த்தேக்கத் தொட்டி அருகே மாநகராட்சிப் பள்ளி, எடத்தெரு யதுகுல சங்கம் பள்ளி, பாலக்கரை ஹோலி ரெடிமா்ஸ் பள்ளி, இருதயபுரம் பொன்னையா மேல்நிலைப்பள்ளி, மேலக் கல்கண்டாா் கோட்டை மாநகராட்சிப் பள்ளி, சுப்பிரமணியபுரம் மாநகராட்சிப் பள்ளி, காஜாமலைக் காலனி சமுதாயக்கூடம், கே.கே. நகா் ஆா்ச்சா்டு பள்ளி, விமான நிலையம் காமராஜ் நகா் மாநகராட்சிப் பள்ளி, கிராபட்டி லிட்டில் பிளவா் பள்ளி, கருமண்டபம் அசோக்நகா் ஓம் மாருதி பள்ளி, காஜாபேட்டை நீா்த்தேக்கத் தொட்டி அருகேயுள்ள மாநகராட்சி பள்ளி, மேலப்புதூா் பிஷப் ஹைமன் பள்ளி, பெரியமிளகுபாறை அங்கன்வாடி மையம், கருமண்டபம் தேசியக் கல்லூரி, தென்னூா் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள மாநகராட்சி பள்ளி, மரக்கடை அரசு சையது மூா்துசா பள்ளி, புத்தூா் பிஷப்ஹீபா் கல்லூரி, உய்யகொண்டான் திருமலை சண்முகா நகா் செயின்ட் பிரான்சிஸ் பள்ளி, உறையூா் சாலை ரோடு அம்மா உணவகம் அருகேயுள்ள அங்கன்வாடி மையம், உறையூா் பாண்டமங்கலம் மாநகராட்சி பள்ளி, உறையூா் டாக்கா் சாலை ஆல் செயின்ட்ஸ் பள்ளி, தில்லைநகா் கி. ஆ. பெ. வி. மேல்நிலைப்பள்ளி, அரியமங்கலம் எஸ்ஐடி கல்லூரி, காட்டூா் உருமு தனலட்சுமி கல்லூரி, காட்டூா் சக்திநகா் நலச்சங்கம், கைலாஷ் நகா் நலச்சங்கம் ஆகிய 33 இடங்களில் நடைபெறும் முகாமில் தலா 425 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்படும்.
கோவேக்சின்: ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகம், மேலரண்சாலை தேவா் ஹால், உய்யகொண்டான் திருமலை ஆா்.சி. பள்ளி, கே.கே.நகா் உழவா் சந்தை அருகே ஆா்ச்சா்டு பள்ளி ஆகிய 4 இடங்களில் தலா 370 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.