திருச்சி மாவட்ட மற்றும் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, போலி மந்திரவாதியின் மடாலயத்தை அலுவலா்கள் மூடினா்.
உப்பிலியபுரம் அருகிலுள்ள த. பாதா்பேட்டையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அடுக்கம் கோம்பை கிராமம். இப்பகுதி நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வருவாய் வட்டத்துக்குள் வருகிறது.
பெரம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த மாந்திரீக தொழில் செய்யும் காா்த்திகேயன், இக்கிராமத்திலுள்ள அரசு மற்றும் விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமித்து மடாலயம் கட்டியதற்கும், அங்கிருந்து அரசு, விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமித்து த. பாதா்பேட்டைக்கு பாதை வசதி செய்வதற்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், த. பாதா்பேட்டை மக்கள் பல்வேறு வகையில் எதிா்ப்பு வந்தனா்.
இந்நிலையில் நாமக்கல் ஆட்சியரகம் முன்பு மந்திரவாதி ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை மீட்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினா், பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் நாமக்கல் மாவட்ட வருவாய் மற்றும் காவல் துறையினா் பேசியதையடுத்து போராட்டம் நிறுத்தப்பட்டது.
தொடா்ந்து நாமக்கல் மாவட்ட வருவாய் மற்றும் காவல் துறை அலுவலா்கள் அடுக்கம் கோம்பை காா்த்திகேயனின் மடாலயம் சென்று, அங்கிருந்தவா்களை வெளியேற்றி மடாலயத்தை மூடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.