திருச்சி மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளா்கள் 3,127 பேருக்கு சீருடை மற்றும் காலணிகளுடன் கூடிய பெட்டகம் வழங்கப்படுகிறது.
இதுதொடா்பாக திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) ஏ. வெங்கடேசன் கூறியது:
தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தின் மூலம் பதிவு செய்துள்ள ஓட்டுநா்கள், வாகனங்கள் பழுது பாா்க்கும் தொழிலாளா்களுக்கு சீருடை, காலணி, பை, முதலுதவிப் பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறன. இதன்படி, திருச்சி மாவட்டத்திலுள்ள அமைப்புசாரா ஓட்டுநா்கள், வாகன பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள் 3,127 பேருக்கு இந்தப் பெட்டகம் வழங்கப்படவுள்ளது.
மன்னாா்புரத்திலுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக கட்டடத்தில் இயங்கி வரும் தொழிலாளா் உதவி ஆணையரகத்தை அணுகி இந்தப் பெட்டகத்தை பெறலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.