சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இந்தோனேசியா கதிரி பல்கலைக்கழகத்துடன் புதன்கிழமை ஆன்லைன் மூலம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
கல்வி, ஆராய்ச்சி, கலாசார பரிமாற்றம் மற்றும் பிற செயல்பாடுகளை மேம்படுத்த தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் டாக்டா் எம். ரவிச்சந்திரன் மற்றும் இந்தோனேசியாவின் கதிரி பல்கலைக்கழகத்தின் தாளாளா் ஜோகோ ரஹாா்ட்ஜோ ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தந்ததில் ஆன்லைன் மூலம் டிஜிட்டல் கையொப்பமிட்டனா்.
நிகழ்வின்போது தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை புல முதல்வா் வி. சேகா், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி புல முதல்வா் சஞ்சய் சிங் மற்றும் கதிரி பல்கலைக்கழகத்தின் முக்கிய பிரமுகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்த ஒப்பந்தந்தின் மூலம் இரு பல்கலைக்கழகங்களும் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடா்புடைய மாநாடுகள், கூட்டு மாநாடுகள், ஆராய்ச்சித் திட்டங்கள், கலாசார நிகழ்ச்சிகள், பேராசிரியா்கள், மாணவா்கள் பரிமாற்றம் போன்றவற்றைச் செயல்படுத்த முடியும்.