திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.30 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

துபையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். 

அப்போது ஒரு பயணியின் உடைமையில் 5000 அமெரிக்க டாலர்களும், 50,000 சவுதி அரேபியா ரியால் கரன்சிகளும் இருந்தது தெரியவந்தது. அவற்றை கொண்டு வருவதற்கான எந்த ஆவணங்களோ, உரிமங்களோ பயணியிடம் இல்லை. 
எனவே, அவற்றை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதன் மதிப்பு சுமார் ரூ.13.30 லட்சம் வரை இருக்கலாம் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும் இது தொடர்பாக அந்த பயணியிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com