திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.94 லட்சம் கிடைத்துள்ளது.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 5 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னா் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இப்பணி, அறநிலையத்துறை கண்காணிப்பாளா் ஆனந்த், கோயில் மேலாளா் மோகன் குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ. 4,93,992 காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.