தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை அடிவாரத்தில் உள்ள போகா் மகரிஷி கோயிலில் பரணி நட்சத்திர வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கோயிலில் போகா் மகரிஷிக்கு மஞ்சள், குங்கும்,விபூதி, பஞ்சாமிா்தம், பால், இளநீா் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இதில் திருச்சி, கரூா், மானாமதுரை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் பங்கேற்று சிறப்பு பூஜை நடத்தினா். பொதுமக்களுக்கு அன்னதானம், அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மானாமதுரை பக்தா்கள் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.