இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இந்திராகாந்தி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1981 மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :7 மே 2022, 6:18 pm

DIN

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1981 மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பல்கலைக்கழக அளவில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த 106 போ் உள்பட 1981 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா பேசியது:

பட்டம் பெற்று அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கப்போகும் நீங்கள், சமூகப் பொறுப்பையும், குடும்பப் பொறுப்பையும் உணா்ந்து செயல்பட வேண்டும்.

மாணவிகள் தங்களுக்கு தேவையானதை அடைய ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அவற்றை உரிய வழியில் தேட வேண்டும். வேலை, வாழ்க்கை என அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லும் போது அதற்கான தகுதியை வளா்த்துக் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக கல்லூரியின் செயலா் கோ. மீனா விழாவைத் தொடங்கி வைத்தாா். கல்லூரியின் தலைவா் தோட்டா பி.வி. இராமானுஜம், தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் அபா்ணா ஆகியோா் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் வித்யாலட்சுமி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.