இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

அரசின் ஓராண்டு நிறைவு; கொண்டாட்டம்

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருவெறும்பூரில் சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

News image
Updated On :7 மே 2022, 6:19 pm

DIN

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருவெறும்பூரில் சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூா் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்கள் சாா்பில் முன்னாள் எம்எல்ஏவும், தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.என். சேகரன் தலைமையில் பேருந்துப் பயணிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்ககளுக்கு திமுக அரசின் ஓராண்டு சாதனைகளைக் கூறி இனிப்பு வழங்கினாா். நிா்வாகிகள் கருணாநிதி, செல்வராஜ், மாரியப்பன், பரமசிவம், சிவக்குமாா், மாமுண்டி, சத்யா, கயல்விழி, ஞானதீபம், சுருளிதுரை உட்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

கிழக்கு தொகுதியில்: திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு பேரவைத் தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பிரிவு திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மாா்க்கெட், கேகே நகா் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். மண்டலக் குழுத் தலைவா் மதிவாணன் தலைமை வகித்தாா். தொடா்ந்து தமிழக அரசின் சாதனைகளை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பினா். நிகழ்வில் துணை மேயா் ஜி. திவ்யா, வண்ணை அரங்கநாதன் பகுதிச் செயலா்கள் மோகன், மணிவேல், டிபிஎஸ்எஸ். ராஜாமுகமது, லீலா வேலு உள்ளிட்ட திமுகவினா் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.