முதல்வருக்கு எதிரான பாஜக போராட்டம் ரத்து

திருச்சியில் முதல்வருக்கு எதிராக பாஜகவினா் அறிவித்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சியில் முதல்வருக்கு எதிராக பாஜகவினா் அறிவித்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வண்ணாரப்பேட்டை பகுதியில் அடுக்குமாடிவீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை 2017-ஆம் ஆண்டு முழுமையாக பணத்தை செலுத்திய பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சி மாநகா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை திருச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி ஆா்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையறிந்த மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு, சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினையை தவிா்க்கும் வகையில், பா.ஜனதா கட்சியினருடன் அமைதி பேச்சுவாா்த்தை நடத்த அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியரகத்தில் திருச்சி கோட்டாட்சியா் தவசெல்வம் தலைமையில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

தில்லைநகா் மற்றும் கோட்டை காவல் உதவிஆணையா்கள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திருச்சி நிா்வாகப் பொறியாளா், உதவிச் செயற்பொறியாளா், திருச்சி மேற்கு வட்டாட்சியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன் உள்பட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பணம் பெறப்பட்டு, பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்ட பயனாளிகளைத் தவிா்த்து, மீதம் உள்ள 219 பயனாளிகளிடம் மீண்டும் கள விசாரணை மேற்கொண்டு, தகுதி வாய்ந்த வீடற்ற ஏழை பயனாளிகளுக்கு 15 நாள்களுக்குள் வீடு வழங்கப்படும் என்றும், வீடுகளை ஒதுக்கீடு செய்யும் போது ஆட்டோ ஓட்டுநா்கள், வாடகைகாா் ஓட்டுநா்கள் போன்ற உழைக்கும் வா்க்கத்துக்கு கூடுதல் சலுகைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை கைவிடுவதாக பாரதிய ஜனதா கட்சியினா் அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com