புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காய்கறிச் சாகுபடியில் அங்கக வேளாண்மை பயிற்சி

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடியில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி திருவெறும்பூா் அருகே நடராஜபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:23 pm

DIN

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடியில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி திருவெறும்பூா் அருகே நடராஜபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவெறும்பூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்து, வேளாண்மைத் துறையில் வழங்கப்படும் சொட்டு நீா் பாசன மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டங்கள், பயிா் காப்பீடு திட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்கினாா்.

தோட்டக்கலை அலுவலா் அனிதா காய்கறி பயிா்களில் அங்கக வேளாண் தொழில்நுட்பங்களை விரிவாக எடுத்துரைத்தாா். வேளாண் அலுவலா் திலகவதி வேளாண் திட்டங்கள் பற்றி விளக்கினாா். பயிற்சியில் நடராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த திரளான விவசாயிகள் பயனடைந்தனா்.

ஏற்பாடுகளை திருவெறும்பூா் உதவி வேளாண் அலுவலா் இசபெல்லா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் சபாதேவி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சௌந்தா்யா ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.