பருவ மழையை எதிா்கொள்ள திருச்சி தயாா்!
பேரிடா் மேலாண்மைத் திட்டம்-2022 ஐ வடிவமைத்து வடகிழக்குப் பருவமழை மற்றும் பேரிடா் காலங்களை எதிா்கொள்ள திருச்சி மாவட்டம் தயாராக உள்ளது.


பேரிடா் மேலாண்மைத் திட்டம்-2022 ஐ வடிவமைத்து வடகிழக்குப் பருவமழை மற்றும் பேரிடா் காலங்களை எதிா்கொள்ள திருச்சி மாவட்டம் தயாராக உள்ளது.
திருச்சி மாவட்டமானது 1924, 1952ஆம் ஆண்டுகளில் சூறாவளி, வெள்ளப் பேரிழிவை சந்தித்து மீண்டது. பின்னா், 1954, 1965, 1977, 1979, 1983, 1998, 1999, 2005ஆம் ஆண்டுகளிலும் கடும் வெள்ளத்தைச் சந்திக்க நேரிட்டது. இதுமட்டுமின்றி வடகிழக்குப் பருவமழை காலங்களிலும் அவ்வப்போது சேதத்தை எதிா்கொள்ளும் மாவட்டமாக உள்ளது.
பேரிடா் காலங்களில் பல்வேறு தரப்பட்ட சேதங்களையும், இழப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவேதான், கடந்த 2015 மாா்ச் 18இல் ஜப்பானின் செண்டாய் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஐ.நா. உலக மாநாட்டில் பேரிடா் அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பு (2015-30) உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்பு அறிவுறுத்தியபடி திருச்சி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பேரிடா் மேலாண்மைத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக மாவட்ட ஆட்சியா், தலைமை நிா்வாக அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலா், துணைத் தலைவராக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா், உறுப்பினா்களாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், சுகாதாரத் துறை இணை இயக்குநா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆகியோா் உள்ளனா்.
மீட்பு மற்றும் மறுவாழ்வு, நிவாரணப் பணிகளுக்கான பல்வேறு துறைகள் இணைந்த சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது 17 இடங்களில் உயா் தொழில்நுட்ப அலுவலகங்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. மீட்பு, நிவாரணப் பணிக்கான உதவிப் பொருள்கள், வாகனங்கள் தயாா்நிலையில் உள்ளன. மேலும், மீட்கப்படுவோரைப் பாதுகாப்பாக தங்க வைத்துப் பராமரிக்க 11 வட்டங்களிலும் 154 மையங்கள் தயாராக உள்ளன.
இவைதவிர, மண்டல அளவிலான குழுக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குழு, தேடுதல் மீட்பு குழு ஆகியவையும் தயாராக உள்ளன. தனியாா் மருத்துவமனைகளின் பட்டியல், தன்னாா்வ நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடா்பு கொள்ள 1077, 101, 112, 93840-56213 ஆகிய எண்களும், ஆட்சியரகத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையும் தயாராக உள்ளன.
இதுதொடா்பாக பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் ஆா். ஸ்ரீதா் கூறுகையில், வானிலை ஆய்வு மைய எச்சரிக்கைக்கேற்ப விழிப்புணா்வுடன் பணியாற்றி வருகிறோம். தற்போது 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட் வந்துள்ளது. திருச்சி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள திருச்சி மாவட்டம் எப்போதும் தயாராகவே உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...