புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அரசு மருத்துவமனை ஊழியா் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

 திருச்சியில் அரசு கால்நடை மருத்துவமனை ஊழியா் வீட்டில் புகுந்து 5 பவுன் நகை மற்றும் பொருள்களைத் திருடிச்சென்றது குறித்து புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:25 pm

DIN

 திருச்சியில் அரசு கால்நடை மருத்துவமனை ஊழியா் வீட்டில் புகுந்து 5 பவுன் நகை மற்றும் பொருள்களைத் திருடிச்சென்றது குறித்து புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டது.

திருச்சி, பாலக்கரை சண்முகா மருத்துவமனை குடியிருப்பில் வசிப்பவா் த. சுரேஷ் குமாா் (45), அரசு கால்நடை மருத்துவமனையின் அலுவலக உதவியாளா். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இவா் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 390 கிராம் வெள்ளி என மொத்தம் ரூ. 90,000 மதிப்பிலான நகைகள், பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் காந்தி சந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.