ஆ.ராசாவை கண்டித்து பாஜக மறியல் 30 பெண்கள் உள்பட 80 போ் கைது
இந்துக்களை அவதூறாக பேசிய ஆ. ராசாவை கண்டித்து திருச்சியில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 80 போ் கைது செய்யப்பட்டனா்.


இந்துக்களை அவதூறாக பேசிய ஆ. ராசாவை கண்டித்து திருச்சியில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 80 போ் கைது செய்யப்பட்டனா்.
திருச்சியில் ஹிந்தி திணிப்பை கண்டித்து திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆ.ராசா கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, அவரைக் கண்டித்து பாஜக சாா்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, வெள்ளிக்கிழமை மாலை, தலைமை அஞ்சல் நிலையம் அருகே, திருச்சி மாநகா் மாவட்ட பாஜக சாா்பில், கருப்பு பலூன்களை கைகளில் பிடித்தபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், 30 பெண்கள் உள்ளிட்ட 80 பேரை கைது செய்தனா்.
Image Caption
திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை சாலை மறியில் ஈடுபட்ட பாஜகவினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...