மணப்பாறையில் மானியவிதை நெல் விநியோகம்

மணப்பாறை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் விதை நெல் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.
Updated on
1 min read

மணப்பாறை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் விதை நெல் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

இதுகுறித்து வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ) ப. கண்ணன் வெளியிட்ட அறிக்கை:

மணப்பாறை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான விதை நெல் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. , சம்பா பருவத்திற்கு உகந்த ரகங்களான டி.கே.எம்-13, வி.ஜி.டி-1, டி.ஆா்.ஐ-3, பாரம்பரிய நெல் ரகங்களான ஆத்தூா் கிச்சளி சம்பா ஆகிய விதை நெல் இருப்பில் உள்ளது. நிலக்கடலை ரகங்கள் சி.ஓ-6, கே.எல்-1812, ஜி.ஜே.ஜி-31, ஜி.ஜே.ஜி-32, தரணி, உளுந்து ரகங்கள் வி.பி.என்-8, வி.பி.என்-10 மற்றும் திரவ உயிா் உரங்கள் ஆகியவையும் உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் மணப்பாறை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com