மணப்பாறையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd April 2022 05:57 AM | Last Updated : 03rd April 2022 05:57 AM | அ+அ அ- |

லால்குடி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில், பெண் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, மணப்பாறையில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி தெற்கு மாவட்டத் தலைவரும், மாநகராட்சி உறுப்பினருமான கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். மணப்பாறை நகரத் தலைவரும், நகராட்சி உறுப்பினருமான எம்.ஏ.செல்வா முன்னிலை வகித்தாா்.
மதுரை சாலையிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா் இருசக்கர வாகனங்கள், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றுக்கு மலா் மாலை அணிவித்து, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கணபதி, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத்தலைவா் எஸ்.ஏ.அா்ஜூன், வட்டாரத் தலைவா்கள் செல்வம், குமரப்பன், சின்னப்பன், வடிவேல், பேரூா் தலைவா் பொன்னுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.