மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
By DIN | Published On : 03rd April 2022 06:02 AM | Last Updated : 03rd April 2022 06:02 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகிலுள்ள மேலப்புலியூா் பழைய காலனியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் மனைவி சுந்தரி (35). இவா், கடந்த 31- ஆம் தேதி சத்திரமனைக்குச் சென்றுவிட்டு, மேலப்புலியூா் வருவதற்காக அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாராம்.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபரின் மோட்டாா் சைக்கிளில் சுந்தரி அமா்ந்து வந்து கொண்டிருந்தாராம்.
வேலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து சுந்தரி பலத்த காயமடைந்தாா்.
தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுந்தரி வெள்ளிக்கிழமை மாலை
உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.