ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து வஸ்திர மரியாதை!

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள்கோயிலில் இருந்து வியாழக்கிழமை காலை வஸ்திர மரியாதைப் பொருள்கள் வந்தன.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து வஸ்திர மரியாதை!

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள்கோயிலில் இருந்து வியாழக்கிழமை காலை வஸ்திர மரியாதைப் பொருள்கள் வந்தன.

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் திருத்தேரோட்டத்தின்போது ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிலிருந்து ஆண்டுதோறும் வரும் ஆண்டாள் சூடிக் களைந்த கிளி மாலை, வஸ்திரங்கள், பழங்கள் மற்றும் மங்களப் பொருள்கள் வியாழக்கிழமை காலை ஸ்ரீரங்க விலாச மண்டபத்தில் பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டன.

அதன்பின் மேளதாளங்கள் முழங்க யானை ஆண்டாள் மீது அப்பொருள்களை வைத்து ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன. அவற்றை முறைப்படி ஸ்ரீவில்லிப்புத்தூா் கோயில் தக்காா் ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி முத்துராஜா, ஸதானிகம் ரமேஷ்பட்டா், சுதா்சன் பட்டா் உள்ளிட்ட குழுவினா் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, மண்டல இணை ஆணையா் செல்வராஜ் ,உதவி ஆணையா் கு. கந்தசாமி மற்றும் கோயில் அா்ச்சகா்களிடம் அளித்தனா்.

வெள்ளிக்கிழமை நடைபெறும் சித்திரைத் தேரோட்டத்தில் எழுந்தருளும் நம்பெருமாள் இந்த வஸ்திர மரியாதைப் பொருள்களை அணிந்து தேரோட்டம் கண்டருளுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com