ரேஷன் கடைகள் திறப்பு

திருச்சி மேற்குப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் 3 புதிய ரேஷன் கடைகளை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
Published on
Updated on
1 min read

திருச்சி மேற்குப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் 3 புதிய ரேஷன் கடைகளை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

வயலூா் சாலையின் வழியே கல்லாங்காடில், உய்யக்கொண்டான் பாலத்தின் முன்புறம் உள்ள லாவண்யா காா்டன் பகுதியில், உறையூரில் மேற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் 3 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வுகளில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், ப. அப்துல்சமது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com