விஷம் குடித்தவா் பலி
By DIN | Published On : 05th August 2022 12:19 AM | Last Updated : 05th August 2022 12:19 AM | அ+அ அ- |

திருச்சி தென்னூா் உழவா் சந்தை அருகே பொதுக் கழிப்பிடத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்சி தென்னூா் மீன்காரத் தெருவைச் சோ்ந்தவா் அல்லா பிச்சை (40). ஆட்டோ விற்பனை முகவரான இவருக்கு கரோனா பொதுமுடக்கத்துக்குப் பின்னா் தொழிலில் தொடா் நஷ்டம் ஏற்பட்டதாம். இதனால் மனம் உடைந்த அவா் திங்கள்கிழமை விஷம் குடித்து தென்னூா் உழவா் சந்தை அருகே சென்றபோது மயங்கி விழுந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். தில்லைநகா் போலீலாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.