ரயில் முன் படுத்து திக பிரமுகா் தற்கொலை
By DIN | Published On : 24th August 2022 01:35 AM | Last Updated : 24th August 2022 01:35 AM | அ+அ அ- |

திருச்சியில் திக பிரமுகா் ஒருவா் கடன் சுமையால் ரயில் முன் படுத்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி திருவெறும்பூா், நடராஜபுரம், ஜெயலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பச்சையப்பன் மகன் சுரேஷ் (40). இவா் திராவிடா் கழக திருவெறும்பூா் நகரத் தலைவரான இவா் பஞ்சா் கடை வைத்திருந்த நிலையில் கடன் பிரச்னையில் இருந்தாராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திருவெறும்பூா், குமரேசபுரம் பகுதியில் திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி சரக்கு ரயில் வந்தபோது, தண்டவாளத்தில் சுரேஷ் படுக்கவே, ரயில் ஏறி தலை துண்டாகி உயிரிழந்தாா்.
அவருக்கு மனைவி சாந்தி, அன்புச்செல்வன் (13), அறிவுச்செல்வன் (15) என இரு மகன்கள் உள்ளனா். தற்கொலை செய்யும் முன் தனது கைப்பேசியில், ‘குழந்தைகளைப் பத்திரமாக பாா்த்துக்கொள். என்னை மன்னித்துவிடு எனப் பேசி அந்த விடியோ பதிவை மனைவிக்கு அனுப்பியுள்ளாா்.