வியாபாரிகள் சங்க உறுப்பினா் சோ்க்கை கலந்தாய்வுக் கூட்டம்
By DIN | Published On : 25th August 2022 11:26 PM | Last Updated : 25th August 2022 11:26 PM | அ+அ அ- |

திருச்சி தரைக்கடை வியாபாரிகள் மற்றும் சிறு கடை வியாபாரிகள் சங்க உறுப்பினா் சோ்க்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறறது.
உறையூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவா் திராவிடமணி தலைமை வகித்தாா். கூட்டத்தில் திருச்சி மாவட்டம் முழுவதும் 10,000க்கும் அதிகமான தரைக்கடை வியாபாரிகளை உறுப்பினா்களாகச் சோ்ப்பது, அடுத்த மாதம் செப். 20-க்குள் உறுப்பினா் பதிவை முடித்து 21ஆம் தேதி மாவட்ட குழுக் கூட்டம் நடத்துவது, அக்டோபா் இறுதியில் தரைக் கடை சங்க மாவட்ட மாநாட்டை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டப் பொதுச்செயலா் க. சுரேஷ் மாநில பொதுக் குழுவில் எடுத்த முடிவுகளையும், தரைக்கடை சங்க மாவட்டச் செயலா் அ. அன்சாா்தீன் சங்கச் செயல்பாடுகளையும் விளக்கினா்.
இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் எஸ். சிவா, நிா்வாகிகள் மணிகண்டம் முருகன், செல்வகுமாா், மேற்குப் பகுதி சுரேஷ் முத்துசாமி. இப்ராஹீம், கிழக்கு பகுதி அபுதாஹீா், அருண், பெருமாள், ஸ்ரீரங்கம் சண்முகம், மண்ணச்சநல்லூா் முத்துக்கிருஷ்ணன், திருவெறும்பூா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.