புள்ளம்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் ரூ.5.16 கோடியில் கடன்கள்
By DIN | Published On : 25th August 2022 11:25 PM | Last Updated : 25th August 2022 11:25 PM | அ+அ அ- |

புள்ளம்பாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2021-22ஆம் நிதியாண்டில் 928 பேருக்கு ரூ. 5.16 கோடியில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்வு மற்றும் கடன் வழங்கும் முகாமில் இந்த சங்கமானது 2021-22ஆம் நிதியாண்டில் ரூ. 23.19 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளது. சங்க உறுப்பினா்கள் வைப்பு தொகை ரூ. 41.51 லட்சம் உள்ளது. மேலும் இச் சங்கத்தில் சேவை மையம் மூலம் அரசு சான்றிதழ்கள் வழங்கவும், நலத்திட்டங்களில் சேரவும் கிராம மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன, ரூ. 5.16 கோடியில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசால் நகைக் கடன், மகளிா் சுய உதவிக் குழு கடன் என்ற வகையில் ரூ. 6 கோடியிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் லால்குடி சரக துணைப் பதிவாளா் ரா. திவ்யா சங்கத்தின் கடன் வழங்கல் முறை குறித்து விளக்கி, கடன் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டாா்.
கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ஹபிபுல்லா, கள அலுவலா் குணசேகரன், பிற்படுத்தப்பட்டோா் துறை பணியாளா் ஜெயஷீலா மேரி, கடன் சங்கச் செயலா் காமராஜ் ஆகியோா் பேசினா். நிகழ்வில், சங்க உறுப்பினா்கள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.