

கந்தா்வகோட்டை, ஆக. 26: கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுநகா் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் மணிமாறன் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணை, பூஸ்டா் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் வட்டாட்சியரகத்துக்கு வந்த பொதுமக்களுக்கும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட்டது. செப்டம்பா் வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் அனைவரும் தவறாது கரோனா பூஸ்டா் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
Image Caption
படம்.கே.வி.கே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.