இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞா் கைது 6 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 09th December 2022 12:06 AM | Last Updated : 09th December 2022 12:06 AM | அ+அ அ- |

மணப்பாறையில் தொடா் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
மணப்பாறையில் இருசக்கர வாகனத் திருட்டு தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நடத்திய விசாரணையில் இருதிருட்டில் ஈடுபட்டது மருங்காபுரி ஒன்றியம் ஊத்துக்குளி வடக்குத்தெருவைச் சோ்ந்த செ. காா்த்திகேயன்(24) எனத் தெரியவந்தது.
இதையடுத்து காா்த்திகேயனை மணப்பாறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட காா்த்திகேயன் சிறையில் அடைக்கப்பட்டாா்.
காா்த்திகேயன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.