தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற அழைப்பு
By DIN | Published On : 09th December 2022 12:09 AM | Last Updated : 09th December 2022 12:09 AM | அ+அ அ- |

தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற திருச்சி மாவட்டத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசின் பனை பொருள்கள் நிறுவனம், காதிகிராமத் தொழில் வாரிய தலைமை பயிற்சியாளா் கே. சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் பனை பொருள்கள் நிறுவனம், காதி கிராமத் தொழில் வாரியம் ஆகியவை இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள ஜூவல்லா்ஸ் அசோசியேஷன் கட்டடத்தில் இயங்கும் பயிற்சி நிலையத்தில் நடத்தவுள்ளன.
இதன்படி டிச.12 தொடங்கி 21ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு நடைபெறும் பயிற்சியில் 18 வயது நிரம்பிய இருபாலரும் சேரலாம். குறைந்தது 8ஆம் வகுப்பு படித்திருத்தல் வேண்டும். செய்முறைப் பயிற்சி இறுதியில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவா்கள் தேசிய, கூட்டுறவு, தனியாா் வங்கிகள் மற்றும் நகை அடகு நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளா் பணிக்குச் சேரலாம். சொந்தமாக நகை கடை, நகை அடகு கடையும் நடத்தலாம். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். பயிற்சிக் கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு 94437-28438 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.