நாய்களுக்கான 2ஆவது கருத்தடை அறுவைச் சிகிச்சை மையம்: மேயா் தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 09th December 2022 11:07 PM | Last Updated : 09th December 2022 11:07 PM | அ+அ அ- |

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் நாய்களுக்கான 2ஆவது கருத்தடை அறுவைச் சிகிச்சை மையத்தை மேயா் மு. அன்பழகன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
திருச்சி உறையூா் கோணக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது கருத்தடை மையத்தில் கடந்த சில மாதங்களாக நாய்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது 2ஆவது கருத்தடை அறுவைச் சிகிச்சை மையம் ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தையும், வெறி(ரேபிஸ்) நாய் தடுப்பு மையத்தையும் மேயா் மு. அன்பழகன் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதையும் பாா்வையிட்டாா். மேலும், அரியமங்கலம் குப்பை கிடங்கு மற்றும் கொட்டப்பட்டு ஜே.கே. நகா் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் கருத்தடை அறுவைச் சிகிச்சை மையங்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் இரா.வைத்திநாதன் , கோட்டத் தலைவா்கள் ஆண்டாள் ராம்குமாா், துா்கா தேவி, நகரப் பொறியாளா் சிவபாதம், ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் ரவி, செயற்பொறியாளா் குமரேசன், நகா்நல அலுவலா் (பொறுப்பு) ஷா்மிலி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
4 கருத்தடை அறுவைச் சிகிச்சை மையங்களும் முழு வீச்சில் செயல்படத் தொடங்கினால் ஒரு மையத்தில் 30 நாய்கள் வீதம் 4 மையங்களிலும் சோ்த்து, தினமும் 120 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும். இதே நிலையில் அறுவைச் சிகிச்சைகள் தொய்வில்லாது நடந்தால் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் நாய்கள் இனப்பெருக்கத்தை வெகுவாக குறைக்க முடியும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
Image Caption
திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள நாய்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சை மையத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட மேயா் மு. அன்பழகன். உடன் மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், நகரப்பொறியாளா் ப. சிவபாதம், மண்டல தலைவா்கள் ஆண்டாள் ராம்குமாா், த