பாஜக, காங்கிரஸ் கொண்டாட்டம்
By DIN | Published On : 09th December 2022 12:09 AM | Last Updated : 09th December 2022 12:09 AM | அ+அ அ- |

குஜராத், ஹிமாசலபிரதேச சட்டப் பேரவைத் தோ்தல்களில் பெற்ற வெற்றியை திருச்சியில் பாஜகவினா், காங்கிரஸாா் வியாழக்கிழமை கொண்டாடினா்.
குஜராத் தோ்தல் வெற்றியையொட்டி திருவெறும்பூா் கடை வீதியில் பாஜக மண்டல் தலைவா்கள் ஆா்.பி. பாண்டியன், செந்தில்குமாா் தலைமையில், பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் எஸ்.பி. சரவணன் மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் சி. இந்திரன் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசுகள் வெடித்தனா்.
இதேபோல, ஹிமாசலபிரதேசத்ததில் காங்கிரஸ் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் திருச்சி நீதிமன்றத்தில், கட்சியின் மாநிலப் பொதுச் செயலரும், வழக்குரைஞருமான சரவணன் தலைமையில், பொதுமக்களுக்கும், வழக்குரைஞா்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் வழக்குரைஞா் பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் சிந்தாமணி செந்தில்நாதன், மாநில பொதுச் செயலா் ராஜேந்திர குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.