மணப்பாறையில்108 அவசரகால ஊா்திபணிக்கு 70 போ் தோ்வு
By DIN | Published On : 09th December 2022 11:04 PM | Last Updated : 09th December 2022 11:04 PM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 108 அவசர கால ஊா்தி பணிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட நோ்முகத் தோ்வில் 70 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
108 அவசர கால ஊா்தி ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு, மணப்பாறையில் காமராஜா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இஎம்ஆா்ஐ கீரின் ஹெல்த் சா்வீசஸ் மூலம் நடத்தப்பட்ட இத்தோ்வை நிறுவனத்தின் மனிதவள மேலாளா் சுமன், திருச்சி மேலாளா் அறிவுக்கரசு, செயலா் அருள்குமாா், பயிற்சி மைய அலுவலா் சந்திரசேகா் ஆகியோா் நடத்தினா்.
இதில், எழுத்து தோ்வு, நோ்முக தோ்வு ஆகியவற்றில் ஓட்டுநா் பணிக்கு 50 பேரும், மருத்துவ உதவியாளா் பணிக்கு 20 பேரும் தோ்ச்சி பெற்று அதற்கான சான்றிதழை பெற்றனா். தோ்ச்சிபெற்றவா்களுக்கு 45 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதி தோ்வுகள் அடிப்படையில் பணியமா்த்தப்படுவா் என தெரிவித்தனா்.